Skip to main content

Posts

Showing posts from July, 2018

"காச்சர் கோச்சர்" - விவேக் ஷான்பாக் (காலச்சுவடு வெளியீடு, மொழிப்பெயர்ப்பு - கே. நல்லதம்பி)

மு ன்பு காலச்சுவடு இதழில், கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக் எழுதி வெளியாகியிருந்த "நிர்வாணம்" சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்லதொரு கதையை வாசிக்கும் போதே அதனை எழுதியவரின் பெயரும் தன்னாலே மனதில் வந்து விழுந்து விடுகிறது. அப்படியாக அவருடைய சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஜெயமோகன் தளத்தில் அவரே மொழிப்பெயர்த்திருந்த விவேக்கின் சிறுகதைகள் சில வாசிக்கக் கிடைத்தன. இன்னும் கிடை க்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடாக விவேக் ஷான்பாக் எழுதிய "காச்சர் கோச்சர்" நாவலை வாங்கினேன். இதை மொழிப் பெயர்த்தவர் கே.நல்லதம்பி. எழுதப்பட்ட மொழியிலேயே வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தரும், சற்றும் தொய்வில்லாத கச்சிதமான மொழிப்பெயர்ப்பு. பெங்களூருவைக் களமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்று இதன் பின்னட்டைக் குறிப்பில் கன்னட எழுத்தாளர் கிரீஷ் கார்னட் எழுதியிருக்கிறார். ஆனால், நாவலில் பெங்களூரு என்று வரும் இடத்தில் எல்லாம் சென்னை என்றோ மதுரை என்றோ குறிப்படப்பட்டிருந்தாலும் சின்ன நெருடல் கூட ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை. வறுமையின் விள

அனோஜனின் பச்சை நரம்பு

எனது டொரினா தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் "தமிழ்ச் சிறுகதைகளில் உலவும் பதின்பருவ அக்காக்களைக் குறித்து எவரேனும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்" என்று எழுதியிருப்பார். அப்படியான அக்காக்களின் கதைகள் இத்தொகுப்பிலும் இரண்டு உண்டு. 'இச்சை' கதையும் 'பச்சை நரம்பு'ம் பால்யகால அக்காக்களைப் பற்றிய கதைகளே. 'பச்சை நரம்பில்' அவள் செல்லமக்கா. கதையின் முடிவில் அம்மா கழுத்துப் பச்சை நரம்பு அக்காவிடம் தெரியுமிடம் வரை சரி, அது தீபாவிடமும் தெரிவதாக முடித்திருப்பது இக்கைதையை அளவுக்கதிகமாக ரொமாண்டிஸைஸ் செய்துவிடுகிறது. இவரின் பெரும்பாலான கதைகள் பால்யத்தின் நினைவுச்சரட்டிலிருந்தே பின்னப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு சூழலில் பாலியல் ரீதியான தாக்குதலுக்குள்ளான சிறுவர்கள் இவரது கதைகளில் திரும்பத் திரும்ப வருகிறார்கள். 'இச்சை' கதையில் அந்த நண்பர்களுடன் நடக்கும் உரையாடலில் கதையின் சாரம் இருக்கிறது. ஆனால் அது கதையில் தீர்க்கமாக வெளிப்படவில்லை. சிறுவயதில் நடத்தப்பட்ட பாலியல் துஷ்பரயேகம் எத்தனை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக

போர்ஹேஸின் 'மணல் புத்தகம்'

நேற்று மாலை திருவல்லிக்கேணியில் இருக்கும் பரிசல் புத்தக நிலையத்தில் "இடைவெளி" சிற்றிதழின் ஆசிரியர்க் கூட்டம் நடைபெற்றது. அடுத்த இதழுக்கான உள்ளடக்கம் குறித்தான விவாதத்தோடு, ஏதேனும் ஒரு படைப்பை எடுத்து அது பற்றி உரையாடலையும் வைத்துக் கொள்ளலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. சம்பத்தின் 'இடைவெளி' நாவல் குறித்த உரையாடல் கடந்த முறை நடைபெற்றது. எழுத்தாளர் சி.மோகன் அன்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் போர்ஹேஸின் "மணல் புத்தகம்" சிறுகதை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போர்ஹேஸின் கதைகள் அடர்த்தியும், செறிவும் கொண்ட சிறிய கதைகள். "மணல் புத்தகம்" கதையும் கூட மூன்றே பக்கங்கள் கொண்ட சிறிய கதை. (முதல் கமெண்டில் கதையின் லிங்க் தரப்பட்டிருக்கிறது). அந்த உரையாடலைத் தொகுத்து இங்கு கட்டுரையாக்கியிருக்கிறேன். "எல்லா அலங்காரமான வாக்கியங்களையும், திரும்பக் கூறல்களையும், தொடர் புள்ளிகளையும், பயனற்ற ஆச்சர்யக்குறிகளையும், நீக்குவதற்குக் (எனக்கு) கற்றுத் தந்தார் போர்ஹேஸ். இந்தப் பழக

பட்டினிக் கலைஞன் - ஃப்ரன்ஸ் காஃப்கா

இ டைவெளி சிற்றிதழின் ஆசிரியக்குழு கூட்டத்தில் பட்டினிக் கலைஞன் கதை பற்றி நடந்த விவாதத்தை கீழே ஒரு குறுங்கட்டுரையாகத் தொகுத்திருக்கிறேன். அவன் ஒரு பட்டினிக் கலைஞன். அவனால் நீண்ட நாட்களுக்கு ஒரு கவளம் கூட சாப்பிடாமல் இருக்கவியலும். இந்தக் கலையை பொதுமக்களுக்கு முன்னால் நிகழ்த்திக்காட்டி பிழைத்து வருகிறான். ஒரு காலத்தில் ஐரோப்பிய நகரங்கள் எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தக் கலை நாளடைவில் மக்களிடத்தே செல்வாக்கை இழக்க ஆரம்பிக்கிறது. முன்பு போல கூட்டம் வருவதில்லை. அதன் பொருட்டு அவன் சார்ந்திருக்கும் நிறுவனத்திலிருந்து விலகி சர்க்கஸ் ஒன்றில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அங்கு குதிரைகள் கட்டிப் போடும் இடத்திற்கு அருகே அவனுக்கு ஒரு கூண்டு ஒதுக்கப்படுகிறது. அங்கும் அவனுக்கு பெரிய கவனமில்லை. குதிரைகளைப் பார்க்க வருபவர்கள் ஒன்றிரண்டு பேர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார்கள். ஆனாலும் தொடர்ந்து அவன் தன் பட்டினிக் கலையை நிகழ்த்துகிறான். ஒரு கட்டத்தில் உணவே எடுத்துக் காட்டாமல் அந்தக் கூண்டில் அவன் அமர்ந்திருக்கும் வைக்கோலுடன் வைக்கோலாகப் பொதிந்து இறந்தும் போகிறான். பின்பு, அதே இடத்தில் ஒர

மேய்ப்பரின் கருணை - ஆங்கில மொழிபெயர்ப்பு

Devine Grace By Karthik Balasubramanian (in Tamil) karthikgurumuruganb@gmail.com Translated by Rajakumar Duraiswamy d.rajakumar@yahoo.com Loosely hanging pure white robe completely covered his body, rolling down the feet and spreading around the ground. A strip of red clothing was wound up on his left. The lamp closely held to his bosom, fondly licked the index finger of his left hand. Blissfully contented and absorbed completely by the immense grace of that wall painting, I was brought back to conscious world by someone honking at me. As the signal had changed from red to green, I found the cars in front of me had moved over ten feet, I shifted the gear from neutral to first and moved forward. It is still showering outside. Fairly good rain at the dawn has just reduced to showers. Small pools of water on the road slowed down the vehicles. My boss connected through the Bluetooth, interrupting the the song from some FM channel. "Pradeep, where are you?", he asked me in Mar

மேய்ப்பரின் கருணை ( காலச்சுவடு - ஜனவரி 2018)

த ளர்ந்து தொங்கிய தூய்மையான வெள்ளை நிற ஆடை அவரது உடலை நிறைத்துக் கால்களைத் தழுவி, மண்ணிலும் கொஞ்சம் பட்டுப் படர்ந்திருக்கிறது. அதற்கு மேலே பெரிய சிவப்பு நிற துண்டொன்றை இடப்பக்கமாய்ச் சுற்றியிருக்கிறார். நெஞ்சோடு சேர்த்தணைத்துப் பிடித்திருந்த ஆட்டுக்குட்டி அவரது இடதுகைச் சுட்டுவிரலைத் தன் நாவால் மெதுவாக வாஞ்சையுடன் நக்குகிறது. நெகிழ்வும் நிறைவும் தந்த அந்தச் சுவரோவியத்தில் நான் தோய்ந்துகொண்டிருந்த போது பின்னால் இருந்தவன் அடித்த ஹாரன் சத்தத்தில்தான் சுதாரித்தேன். முன்னால் பத்தடிக்கு மேல் வண்டிகள் நகர்ந்துவிட்டிருந்தன. சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியிருந்தது. நியூட்ரலில் இருந்து முதல் கியருக்கு மாற்றி முன்னகர்ந்தேன். வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. புலர்காலையில் நல்ல மழை பெய்து முடித்து இப்போது வெறும் தூறல் மட்டும் இருந்தது. அதற்கே சாலையில் நீர் தேங்கி, வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. 'எஃப்-எம்'மில் ஓடிக் கொண்டிருந்த பாடலை இடை நிறுத்தி ப்ளூடூத் வழியாக என்னுடைய பாஸ் இணைப்பில் வந்தார். "ப்ரதீப்.. குத்தே அஹே(ஸ்) து?" - எனக்கு மராட்டி தெரியும் என்பதால் என்னிடம் மட்டும

பதாகை - நேர்காணல்

(பதாகை இதழில் புதிய குரல்கள் பகுதியில் வந்த நேர்காணல். நரோபாவுக்கும், பதாகை இணைய இதழ் நண்பர்களுக்கும் நன்றிகள்) சொந்த ஊர், குடும்பம், குடும்பப் பின்னணி, படிப்பு, பணி பற்றி கார்த்திக் பாலசுப்ரமணியன்:  பிறந்தது வளர்ந்ததெல்லாம் இராஜபாளையம். பெற்றோர்களுக்கும் இராஜபாளையம்தான் பூர்வீகம். அப்பாவுக்கு நூல் வியாபாரம். நான் பத்தாம் வகுப்புக்குப் பிறகு உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். கோவையில் கல்லூரிப் படிப்பு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். மனைவியுடனும், இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட தன் கன்னத்தை என் தோள் மீது உரசியபடி, “அப்பா என்ன எழுதுற,” என்று நச்சரித்துக்கொண்டிருக்கும் நான்கு வயது மகனுடனும் தற்போது சென்னையில் வசிக்கிறேன் வாசிப்பு பரிச்சயம் எப்போது? நவீன இலக்கியத்தை வந்தடைந்த பாதை என்ன? கார்த்திக்:  அப்பா நிறைய வாசிப்பார். சிறுவயதிலேயே கி.ரா-வின் நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பை வாங்கிக் கொடுத்து என்னையும் தங்கையையும் வாசிக்கச் சொல்லுவார். எங்கள் ஊரில் புழங்கும் மொழியில், கதைகளை அச்சில் வாசித்தது அப்போது புதிய திறப்பாக இருந்தது