Skip to main content

Posts

Showing posts from February, 2017

டொரினா - சிறுகதை

அ ம்மா மிகச் சாதாரணமாகத்தான் இந்தச் செய்தியைக் கூறினாள். இரவுச் சாப்பாட்டுக்கு சோள தோசையும், மல்லிச் சட்னியும் வைத்திருக்கிறேன். உனக்குக்கூட ரொம்பப் பிடிக்குமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி விசயத்தைச் சொன்னாள். வசந்தா அக்கா இறந்துவிட்டாளாம். அதுவும் தற்கொலையாம் என்றாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவள் பேசிய எதுவுமே என் காதில் விழவில்லை.  மலர்விழியிடம் ஹிமாலயா என்றெழுதியிருந்த ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, கட்டியிருந்த கைலியிலிருந்து ட்ராக்சுக்கு மாறினேன். ஒரு மாதிரி புழுக்கமாக இருக்கிறது. கடற்கரை வரையில் ஒரு நடை போய்வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு, செருப்பையணிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினேன். கிரைண்டரில் ஆட்டி வைத்திருந்த மாவை வழித்துக் கொண்டிருந்தவள், நெற்றியில் வந்து விழுந்த முடியை புறங்கையால் ஒதுக்கிவிட்டு 'சரி' என்றாள். இறங்கி நூறடி நடந்தால் கடற்கரை வந்துவிடும். மனது சஞ்சலப்பட்டுப் போகும் தருணங்களில் எல்லாம் முகத்தில் காற்று பட கொஞ்சம் தூரம் கடலைப் பார்த்து நடந்து வந்தால் போதும் எனக்கு. வீடு திரும்பும் போ

பதினான்காவது அறை - ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள் (தமிழில் யூமா வாசுகி)

பெ ரும்பாலானோர் மர்மக் கதைகளை துப்பறியும் கதைகளோடு குழப்பிக் கொள்கிறார்கள். மர்மக் கதைகளில் அவை ஒரு வகை மட்டுமே. மனோதத்துவ பின்புலத்தில் எழுதப்பட்ட மர்மக் கதைகள் எனக்கு எப்போதும் உவப்பானவை. அவை மனித மனங்களின் இருண்மைப் பக்கங்களைப் பேசுவதன் மூலம் முக்கியத்துவம் பெருகின்றன.  தமிழில் மர்மக் கதைகளுக்கான இடம் என்ன? இங்கு, அவை பெரும்பாலும் ஆரம்ப கட்ட வாசகனுக்கான நுழைவு வாயிலாகவே இருக்கின்றன. இன்றைய தேர்ந்த படிப்பாளிகள் பலரும் அங்கிருந்துதான் தனது வாசிப்பைத் தொடங்கியிருப்பார்கள். தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் எத்தனை பேர் மர்மங்களின் அழகியலை முன் வைத்து கதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று யோசித்தால் அவர்களையும், அவர்கள் எழுதிய கதைகளையும் விரல்விட்டு எண்ணிவிட முடியும் என்பதுதான் உண்மை. என்னால் உடனடியாக புதுமைப் பித்தன், சுஜாதா மற்றும் ஜெயமோகன் (உலோகம்) போன்றவர்களைத்தான் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. சுஜாதா எழுதிய மர்மக் கதைகளின் தொகுப்பு ஒன்றினை உயிர்மை வெளியிட்டு இருப்பதாக ஞாபகம்.  புதுமைப் பித்தனின் "காஞ்சனை" இந்த வகையில் மிக முக்கியமான கதை.  அவரது மற்ற மர்மக்

இரத்தம் விற்பவனின் சரித்திரம் - யூ ஹூவா (தமிழில் யூமா வாசுகி)

அ மெரிக்க, ஐரோப்பிய நாடுகளையும், அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, அன்றாட வாழ்க்கை முறைகளையும் பற்றி நாம் அறிந்த அளவுக்கு, சீனாவைப் பற்றி அறிந்ததில்லை. சீனா ஒரு இரும்புத்திரை கொண்ட நாடு. இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்றே நினைக்கிறேன். பன்னாட்டு வியாபாரத் தொடர்புகள் நிமித்தமாக சீனா தன் திரையைக் கொஞ்சம் விலக்கிக் கொண்டிருக்கிறது.  மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏதொன்றையும் திறந்து பார்க்க விழையும் இயல்பான ஆர்வமே சீனாவைப் பற்றிய புத்தகங்களைப் பார்க்கும் போதும் எழுகிறது. பல்லவி ஐயர் எழுதிய 'சீனா விலகும் திரை' புத்தகம், ஒரு இந்திய எழுத்தாளரின் பார்வையில், உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சீனாவைப் பற்றி பேசும் நூல். ஆனால், இது சீன எழுத்தாளரால், உலகமயமாக்கலுக்கு முந்தைய சீனாவின் உட்பகுதியின் வரலாற்றை ஒரு தனிமனித வரலாற்றுடன் இணைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல். இந்நாவல், சீனாவில் வாழும் ஒரு சாதாரணனின் போராட்டமிக்க வாழ்வைச் சித்தரிக்கிறது. அதன் வழியே, சீனாவின் அரசும், அரசின் அமைப்புகளும் தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் நேரடியான மற்றும் மறைமுக பாதிப்புகளையும் பேசுகிறது. பெரும் இ