Skip to main content

Posts

Showing posts from December, 2017

தூயனின் இருமுனை - ஒரு வாசிப்பனுபவம்

வரும் வார இறுதியில் நடைபெறவிருக்கும் 'விஷ்ணுபுரம் விருது' விழாவுக்குச் செல்வதன் நிமித்தம் சில படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கற்ற வாசிப்பைவிட இது போன்ற ஒப்புக்கொள்ளப்பட்ட அர்பணிப்புடன் கூடிய வாசிப்பு அதுவரை அறிந்திறாத பல புதிய திறப்புகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. இப்படியில்லையென்றால் சீ.முத்துசாமி, ஜெனியஸ் பரியத் போன்ற பெயர்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டேன் என்பதே உண்மை. தமிழ் இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்களைக் காட்டிலும் சிறுகதைப்பரப்பில் மிகப் பெரிய அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இப்போது புதிதாக எழுத வருபவர்களின் வரமும் சாபமும் அதுதான். இதுவரை சொல்லப்படாத கதைகளை அல்லது குறைந்தபட்சம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்காத முறையில் எழுத வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு எழுத வருபவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இவ்விரண்டையும் பூர்த்தி செய்யும் சில கதைகளை உள்ளடக்கி வந்துள்ளது தூயனின் 'இருமுனை' தொகுப்பு (யாவரும் வெளியீடு). இவரின் பெரும்பாலான சிறுகதைகள் மனித மனதின் நுட்பான அகச்சிக்கல்களை அலசுகின்றன.  தொகுப்பின் தலைப்புக் கதையான 

யானை பிழைத்த வேல்

த மிழ்ச் சிறுகதை நூறாண்டு காலத்தைக் கடந்துவிட்டது. ஏற்றமும் தாழ்வும் உச்சமும் சரிவுமென பல அலைகளுக்கிடையே தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது. உள்ளுர் தரம், உலகத் தரம் என்று எந்த அளவுகோலுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய திடமான கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. மணிக்கொடி காலம் தொடங்கி இன்றைய இணைய இதழ்கள் வரையிலான நீண்ட இடையறாத தொடர் ஓட்டத்தில் ஒரு தலைமுறை தன் அடுத்த தலைமுறைக்கு சிறுகதையை கைமாற்றித் தந்தபடியேதான் உள்ளது. இன்று புதிய எழுத்தாளன் ஒருவனால் எழுதப்படும் புதிய சிறுகதைக்குள் அன்றைய மூத்த முன்னோடி எழுத்தாளனின் சாயலும் குணமும் துளியளவேனும் எஞ்சியே நிற்கிறது. உடலும் பாணியும் மொழியும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டிருப்பினும் உள்ளடக்க அளவில் சிறுகதை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. நீதிபோதனைகள் ஒழுக்கவாதம் யதார்த்தவாதம் தனிமனிதவாதம் நவீனத்துவம் பின் நவீனத்துவம் மாய யதார்த்தம், மீபுனைவு என்று பல்வேறு தேற்றங்கள் சிறுகதை வடிவத்தின்மேல் பொருத்தப்பட்டன.. இவ்வாறான பரிசோதனைகளும் கோட்பாடுகளும் வாசிப்பின் பல்வேறு தரப்புகளே அன்றி எழுதுவதற்கான அடிப்படைகள் அல்ல என்பதை சிறுகதை வெகு அடக்கத்துடன்