அதிகாலையில் வரும் வாட்ஸப் குறுஞ்செய்திகளின் கீச்சிடல்கள் எரிச்ச லை க் கிளப்பத் தொடங்கியிருந்தன . அவை எதைப் பற்றியதாக இருக்கும் என்று லஸண்ட்ராவுக்குத் தெரியும். அப்பார்ட்மண்ட்டின் அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே தனியாகப் பிரித்து எலி சத்தமிடுவதைப் போல க் கீச்சிடு ம் ஒலியைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள். காலை யி லேயே அதைப் பார் த்து அன்றைய தினத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய் தவளாக , படுக்கை யை உதறி எழுந்தாள் . வானம் மேகமூட்டமாயிருந்தது . இரவில் வரைந்து வைத்திருந்த அக்ரலிக் ஓவியத்தைப் பார்த்தாள். கருப்பு , மஞ்சள் , சாம்பல் வண்ணங்களில் தீட்டப்பட்ட அரூப உருவங்க ள் பின் இருக்க , முன்னே மரத்தாலான ஒரு பழைய நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள். அது ஒருவிதமான ரஸ்டிக் தன்மையுடன் நன்றாக வந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒரு மாத க் காலமாக இதைத் தீட்டிக்கொண்டிருக்கிறாள் . நேற்று ஓரளவுக்கு நிறைவு பெற்றுவிட்டது என்ற நம்பிக்கை வந்த பின்புதான் தூங்கச் சென்றாள். காலையில் எழுந்து பார்த்தால் , வரைந்த வர